மலேசியத் தமிழர்கள்
என் நாடு மலை நாடு. என்றென்றும் நாம் வாழும் மலேசியத் திருநாடு என்று நம்மை நாமே ஆழப் புதைத்துக் கொண்டு, இந்த மண்ணில் ஆளுமை உரிமையில் சமபங்கு கொண்டுவிட ஊக்கப் படுத்தும் இப்படைப்பு, ஓர் அரசியல் கருவியாக அமையும் - -அமைய வேண்டும் - எனத் திண்ணமாக நம்புகிறேன். அரசியலில் அடியோடு திருப்பங் காணக்கூடிய இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கு புதுப்பாதையை செப்பனிட்டுத் தரக்கூடிய சிந்தனைகளை இந்நூலை உருவாக்கி விடவேண்டும்.
கோழைக்குரல்களை உருவமைத்த போலிமையின் வெங்கொடுமைப் படுகுழியிலிருந்து மீட்க்கப்படும். இனவுரிமை மொழியுரிமை – அரசியச் சமவுரிமைகள் எழுத்து ஏழ்மையை வெட்டி வீழ்த்தும் ஓர் அரசியல் தலைமையைத் தமிழனம் பெற்றெடுக்க வேண்டும் அந்த விழிப்போடு சிந்தித்துச் செயல்படக்கூடிய வீர்ர்களுக்கு இந்நூல் ஒரு கையேடு.