மலையாளக் கரையோரம்
இந்த கட்டுரைகள் முழுக்க மனிதர்கள் இயல்பு மாறாமல் நிறைந்திருக்கிறார்கள், இவற்றை கட்டுரைகள் என்று நான் சொல்வதே சற்று அபத்தமாகத் தோன்றுகிஅது. தனித்தனியே இவை ஒவ்வொன்றும் சிறுகதைத் தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன. சிறுகதைக்கான தொடக்கமும் சுவாரசியமும் முடிவும் கொண்டவையே இவை. சற்று யோசித்தால் ஒரு நாவலின் தனித்தனி அத்தியாயங்களாகவும் இவற்றை என்னால் உணர முடிகிறது.

எப்பேர்ப்பட்ட இலக்கியமாக இருந்தாலும் அதற்கு ஒரு சுவாரசியத்தன்மை வேண்டி இருக்கிறது. சுவாரசியத்தன்மை என்று நான் சொல்வது readabilityயை. இந்த சுவாரசியத்தன்மை இல்லாததாலேயே ஆகச் சிறந்தவையாக பேசப்பட்டாலும் சில நூல்களை என்னால் முழுக்க படித்து முடிக்க முடியாமலே போயிருக்கிறது. ஸ்ரீயின் ஆகப் பெரிய பலம் அவனது எழுத்துகளின் readability.