அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவு கூட ஆசிய, ஆஃப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பண்பாடு அடையாளங்கள் குறித்து நமக்கு இல்லை. மூன்றாம் உலக பண்பாடுகளின் கலாச்சாரத் தன்மையையும் அதன் ரகசிய வழிகளையும் அறிவது நமது பண்பாடு குறித்த சில புதிய வெளிச்சங்களை அடையும் ஒரு முயற்சியே. அந்த வகையில் ஆஃப்ரிக்க தேசமான மலாவி பற்றிய ஒரு திறப்பை இந்த நூல் நமக்கு அளிக்கிறது.