இந்நூல் மானிடவியல் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பில் இரு வகைக் கட்டுரைகள் உள்ளன. தமிழ்நாட்டிலும் தமிழக மலைப் பிரதேசங்களிலும் வாழும் பழங்குடி இனக்குழு மக்களது வாழ்க்கை. மொழி, கலை, பழக்க வழக்கங்களை ஆராய்கிற கட்டுரைகள் ஒரு வகை; தமிழகத்திலும் கேரளத்திலும் வழங்கி வரும் வேலன் வழிபாடு பகவதி வழிபாடு பற்றிய வரலாற்று மானிடவியல் கட்டுரைகள் மற்றொரு வகை.