மகிழ்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள்
தங்கள் கரங்களில் தவழும் இவ்வழகிய நூல் நீண்ட நாட்கள் தொடர் உழைப்பால் விளைந்த ஒரு மாமணியே என்றால் மிகையன்று. தற்போதைய காலகட்ட வாழ்வியல் நோக்கங்கள் அனைவரையும் அவசரமாக முன்னே தள்ளும் அதே தருணத்தில், அவை ஒரு நிலையற்ற மனோபாவத்தையே நமக்கு நாகரிகப் பரிசாக வழங்குகின்றன. கட்டுப்பாடுகள் குறைந்த நாகரிக வாழ்க்கை முறைகளால், அன்றாட வாழ்வின் பல கேள்விகள் பதிலற்றவையாகவே மிதந்து கொண்டுள்ளன. எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் இணைக்கும் ஒரு மாயக் கோட்டினை, நிஜ வாழ்வில் நாம் வரைவதற்கான சாத்தியங்கள் குறித்து ஊடகங்களின் வாயிலாக நம்மால் பேசப்படத்தக்க வாழ்க்கையையே 21-ம் நூற்றாண்டு நமக்கு தந்துள்ளது.