இந்துப் பேரரசர்கள்,முகலாயச் சக்கரவர்த்திகள்,கிறிஸ்தவ ஜெனரல்கள் என்று அனைத்து மதத்தவரும் ஆள்வதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்ட இம்மூதாதை நகரம்;சாதி,மொழி வகையிலும் பலர் ஆண்டுகளித்திருக்க இடமளித்திருக்கின்றது.நிலத்துக்கானப் போர்களை வெற்றியாகவும் தோல்வியாகவும் மாறிமாறி அன்பளித்து,சுயமாக வேறுகொண்டு தலை நிமிர்ந்திருக்கின்றது.அடிமையாகவும் காலம் கழித்திருக்கின்றது.அதனாலேயே அது,இன்னும் தன்னைதானே உயிர்ப்புடன் இயக்கிக் கொண்டிருக்கின்றது.
மதுரையைப் பற்றி பல நூல்ககள் வந்திருந்தாலும் ,அவற்றால் ஓரளவே பேச முடிந்திருக்கும் என்றபோதும் இது,மதுரையை பிரதிநிதித்துவத்துடனும் சுயாதீனத்துடனும் ஆண்ட மதுரை நாயக்கர்களைப் பற்றி பேரளவு பேசுகின்றது.