மாற்றம்
'மாற்றம்’ குறுநாவல் வடிவத்தில் உள்ள ஒரு சுயசரிதை
வடிவத்தில் உள்ள ஒரு குறுநாவல் என்று விவரிக்கப்படுகிறது.
அதேநேரத்தில், ஆட்சி மாற்றங்களையோ தலைவர்களின்
பட்டிலையோ சாராமல் ஒரு தனக்கு நெருங்கிய மனிதர்களின்
வாழ்வை உற்றுப் பார்ப்பதன் மூலம் ஒரு நாட்டின் வரலாற்று
மாற்றங்களைப் பதிவுசெய்ய முடியும் என்று வெற்றிகரமாக
நிறுவுகிறது. சீனாவில் கடந்த ஐம்பதாண்டுகளில் நடந்த
மாற்றங்களை, பள்ளிக்கால நண்பர்களின் வாழ்வில்
நடந்த மாற்றங்களைப் பதிவு செய்வதன் வழியாகச்
சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் மோ – யான்.
No product review yet. Be the first to review this product.