மாணவர்களின் படிப்பிற்கு மட்டும் உதவி செய்யாமல் அவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ, அவர்களுக்குள் எழும் தற்கொலை எண்ணங்களை மாற்ற பல பயிற்சிக் கொடுத்து வருகிறார் . தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 5000 மாணவர்கள் தற்கொலைச் செய்துகொள்கிறார்கள் என்ற செய்தியை அறிந்து கடந்த வருடம் மாணவர் தற்கொலைகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே மாணவர் உதவி எண்ணை (Students Help Line 9698151515) ஏற்படுத்தித் தமிழகம் முழுவதும் ஒரு பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார் .
இந்த புத்தகம் நீங்கள் எழுதுவதற்க்கான அவசியம் ஏன் ஏற்பட்டது ? என்று கேட்டேன் .... அதற்க்கு அவரது பதில்
--இந்தச் சமூகத்தில் பேசமறுக்கும் பாலியல்( sex ) குறித்த மாணவர்களுக்கு அறவே விழிப்புணர்ச்சி இல்லை மாணவர் உதவி எண்ணுக்கு பல கேள்விகள் வந்து குவிந்தன. அதைக்கண்டு அதிர்ந்துப் போனேன்! ஆச்சரியப்பட்டேன்! ஏனென்றால்? மாணவர்கள் என்னிடம் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் காதல் சம்பந்தப்பட்டவை, உணர்வு சம்பந்தப்பட்டவை, நியாயமானவை.
மனசு கஷ்டமாயிருக்கு, படிக்கவே பிடிக்கல, காதலிக்கனும்னு தோனுது, காதலே வெறுப்பாயிருக்கு, நான் காதலிக்கிறவன் நல்லவனா? கெட்டவனானு, தெரியல, அவன் எனக்கு நண்பனா? காதலனா? இல்ல என்னை ஏமாத்திடுவானோன்னு குழப்பமாயிருக்கு, பாலியல் தொந்தரவு செய்யும் அப்பா, மாமா மற்றும் உறவினர்களை என்ன செய்றதுன்னு தெரியல, என் காதலிய புரிந்துகொள்ளவே முடியல, காரணமே தெரியாம மனசு கஷ்டமாயிருக்கு, சினிமாவுல வரும் காதல் காட்சியைப் பார்க்கும்போது எனக்கும் காதலன் இல்லையே, காதலியில்லையேனு மனசு தவிக்குது. என் ஆசிரியரையை என்னக்கு பிடிக்கல, நான் எந்த தப்புமே செய்யல, சந்தேகப்பட்டு எப்பப்பாத்தாலும் எங்க அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் என்னை திட்டிக்கிட்டேயிருக்காங்க அதனால, செத்துறலாம்போல தோனுது.
இத்தனை கேள்விகளுக்கும் யாரிடமும் கேட்க முடியாமல், பெற்றோர்களிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் தனக்கு தானே தீர்வை தேடும் முயற்சியில் தோற்று, மனநோயாளிகளாக மாறி, கோபத்துடனும், வெறுப்புடனும் தவிக்கின்றார்கள் மாணவர்கள். அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியே இந்த புத்தகம்