கடவுளுக்கு பூப்பறிக்க நீளும் விரல்களைப்
பூப்பறிக்க விடாமல் தடுக்கிற ஆன்மீகச் செயலே அய்க்கூ..
பறிக்கச் சம்மதிக்கும்... கண்களால் மட்டும். அவ்வளவுதான்...
அதன்வழி பழக்கத்தை நழுவ விடுகிற அணில்தான் லிங்கு..
காட்சித் தருணங்களைக் காலத்துக்குள் உறயச் செய்தலாகிய..
அய்க்கூ செய்தல்.. செய்தலற்ற இயற்கையில் வாய்திருக்கிறதுஹ்
லிங்குசாமிக்கு..
அத்தகைய லிங்குத் துளிகளிடம் கைப்பிடியளவு அள்ளி
கடல் செய்திருக்கிறாரா அய்யப்பமாதவன்..
மாமல்லை சிற்பங்களை... புராணங்களற்ற... கலைத்துவ ஆளுமையில்..
பார்வையாளர்களுக்கும் சிறப்பாய் விளக்கும் வழிகாட்டியின் வெற்றியை
அய்யப்பமாதவன் இந்த நூலின் வழி அடைந்திருக்கிறார்..
கவிஞர் அறிவுமதி