குழந்தைகளின் ரட்சகன்
சர்ச்சைக்குரிய இந்த நாவல் 1951 ஆம் ஆண்டு பெரியவர்களுக்கென்று வெளியிடப்பட்டது. ஆனால் பதின்மவயதினரின் மனக்கவலை, புறக்கணிப்பு, உளக்கோளாறு ஆகியவை இந்த நாவலின் மையக் கருத்துக்களாக இருந்த்தால் இது அவர்களிடையேயும் பிரபலமானது. உலகத்தின் முக்கியமான மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வருட்த்திற்கு கிட்ட்த்தட்ட 2,50,000 பிரதிகள் விற்பனையாகி வரும் இந்த நாவல் இதுவரை 65 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது.
இந்த நாவலின் முக்கிய பாத்திரமான ஹோல்டன் கால்ஃபீஸ்ட் பதின்ம வயதினரிடையே ‘ கிளர்ச்சிக்கான ஒரு புனித உருவமாக கருதப்பட்டான். இந்த நாவல் தனித்துவம், உடனிருப்பு, இழப்பு, தொடர்பு, விரோதபோக்கு என பல சிக்கலான பிரச்சனைகளை உள்ளடக்கியது.
இந்த நாவல் 1923 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கில மொழியில் வெளிவந்த சிறந்த 100 நாவல்களில் ஒன்றாக ‘டைம்ஸ் 2005’ பட்டியலிலும், 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த 100 நாவல்களில் ஒன்றாக மாடர்ன் லைப்ரேரியாலும் அதன் வாசகர்களாலும் தேர்வு செய்யப்பட்டது.