தூய்மையான அன்புக்காக மரணமில்லை வாழ்க்கையை துறந்த குட்டிக் கடற்கன்னியின் கதை இது.எல்லா கடற்கன்னிகளை போல அவளும் ஆழ்கடலிலேயே வாழ்ந்துகொண்டிருக்கலாம் ஆனால்,இதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்று வாழ்வது வாழ்க்கையாகாது,அதற்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கிறது என்று நினைத்தாள் குட்டிக் கடற்கன்னி.கடலுக்கு அப்பால் இருக்கும் நிலவுலகம்,அதில் வாழும் மனிதர்கள் என அவள் தன் தேடலைத் தொடர,அழகான இளவரசனுடன் காதலில் விழுகிறாள்.கடற்கன்னியால் மனிதருடன் வாழ முடியுமா?காதலண்டன் குட்டிக் கடற்கன்னி இணைந்தாளா?அவளது தேடலுக்கு பதில் கிடைத்ததா?வாருங்கள் ஆழ்கடலுக்குள் சென்று பார்க்கலாம்.