குறி அறுத்தேன் :
ஈழம் என்றொரு சிதந்த யோனி என்கிறா ஒரு வரியில் எனக்கு கல்கியின் முகத்தில் இசைப்பிரியாவின் முகம் தெரிகிறது: மணிப்பூரில் எல்லைப்படை இரானுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு எல்லைப் படைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரத்தை எதிர்த்து போராடும் இரோம் ஷர்மிலாவின் மூகம் தெறிகிறது.
ஆண்டாள் தன் முலைகளை வேரோடு பிடுங்கியெறிந்து கண்ணனிடம் க்காதல் வேண்டியதைப் போல... கண்ணகி தன் முலையைத் திருகியெறிந்து மதுரையை நிர்மூலமாக்கியதைப் போல... கல்கி இந்த சமூகத்தின் முகத்தில் தனது குறியை அறுத்தெறிந்து சில நியாயங்களைக் கெட்கிறார்.
இந்த கேல்விகளுக்கு பின்னால் அவர்கள் ஓங்கி ஓங்கிக் கைதட்டும் ஓசை எனக்கு கேட்க்கிறது... பெரு மழையின்போது ஒலிக்கிற பேரிடி போல