கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இருக்கிற பத்து குறட்பாக்களில் சில நுட்பமான செய்திகள் காணப்படுகின்றன.கடவுளுக்கு பல்வேறு பெயர்களை சூட்டிப் பார்க்கிற வள்ளுவர் ஒவ்வொரு பெயரிலும் ஒரு நுட்பத்தை ஒளித்து வைக்கிறார். ஒரு குறளில் கடவுளை வேண்டுதல் வேண்டாமை இலான் எனக் குறிப்பிடுகிறார். இந்த "வேண்டுதல் வேண்டாமை இலான்" என்னும் தொடர் ஆழ்ந்த பொருளுடையது. பொதுவாக நாம் எந்த பொருளின் மீதும் விருப்பு வெறுப்பு கூடாது என்று சொல்கிறோம்.