போகன் சங்கரின் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் பிரதான உணர்ச்சிகள் மரணமும் மனச் சிதறலும்தான்.மிகப்பெரிய துக்கங்களை சந்திக்கும் மனிதர்கள்,அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்,உடைந்து போகிறார்கள்,அதிலிருந்து மீண்டு எழுகிறார்கள் அல்லது மீள முடியாத நரகத்தில் வாழ்கிறார்கள் என்பதை இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் ஆழமாக உற்றுநோக்குகின்றன.அந்த வகையில் இக்கதைகள் மனித இருத்தலின் பேரவலத்தைப் பேசுகின்றன.