வாய்மொழி மரபின் தனித்தன்மைகளை,எழுத்து மரபின் வசீகரங்களுடன் பிணைத்துப் பயன்படுத்தும் முத்துலிங்கத்தின் மொழி,அவருடைய சிறுகதைகளுக்கென்று ஒரு தனித்த அழகையும் அதன் தொடர்ச்சியாகத் தமிழ்ச் சிறுகதைகளுக்கு ஒரு புதிய சுவையையும் சேர்ப்பதாக அமைந்தது.பல்வேறு நிலப்பரப்புகள்,மாறுபட்ட பருவநிலைகள்,பரிச்சயமற்ற கலாச்சாரச் சூழல்களினூடாக நிகழும் இவருடைய கதைகளின் ஆதாரமான உணர்வு அங்கதம்.எனினும்,அதனடியில் விலக்க நெகிழ்வும் துயரமும் கண்ணீரும் அழியாத சித்திரங்களாய் விரவிக் கிடக்கின்றன.
வெவ்வேறு பிரதேசங்களில்,விதவிதமான பண்பாட்டு சூழலில் கிடந்துசுழலும் மனிதத்தொகையின் விநோதமான வாழ்வியல் சித்திரங்களினால் ஆனதொரு அழகிய கம்பளமாக இத்தொகுப்பை நாம் உருவகித்துக்கொள்ள முடியும்.