நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்பதை எச்சரிகை உணர்வோடு சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் ஆதி வள்ளியப்பன். புவி வெப்பமாவதிலிருந்து மனிதன் தன்னையும், தான் வாழும் உலகையும் காத்துக்கொள்வது எப்படி; சூழல் கேட்டினால் உருவாகியுள்ள அபாயத்தில் இருந்து மனித குலம் மீள்வது எப்படி; நம்மைக் காத்து வரும் இயற்கையைப் பாதுகாப்பது எப்படி எனப் பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்லியிருக்கிறார் நூலாசிரியர்.