கொஞ்சம் பேசலாம்
பெண்ணைத் துறப்பது எப்படி ஆன்மீகம்? கடவுள் ஆணா? பெண்ணா? துறத்தல்தான் ஆன்மீகம் என்றால், தான் ஞானம் பெற வேண்டும் என்கிற பேரவா – பேராசையின் முதல் படி அல்லவா? வெறுமனே பண்டமாட்ற்றாகப் பத்துப் பைசா கற்பூரம் ரெண்டு வாழைப்பழம், ஊதுபத்தி இது தந்து... நமது கனவுகள், ஆசைகள், தேவைகள், பேராசைகள் எல்லாவற்றுக்கும் கையேந்தி நிற்பதுதான் பக்தியா? பக்தி இல்லாவிட்டால் என்னாகும்? நமக்கு நஷ்டமா? சாமிக்கு நஷ்டமா?
இப்படியான் பல கேள்விகளில் துவங்கிய தேடல், அந்தத் தேடலில் கிடைத்த அனுபவங்கள்... ஆத்திகம் – நாத்திகம், இல்லறம் – துறவரம், எளியவர்கள், வறியவர்கள் – ஆளுமைகள், செல்வந்தர்கள், இயற்கை – செயற்கை, மந்திரம் – தந்திரம் என பல நிலைகளில் நின்று அனுபவங்களைச் சொல்லி செல்லும் சுவராசிய உரையாடலே இந்த நூல்.