நாவல் நிகழும் நிலத்தின் பண்புகளை மாற்றவில்லை.பண்பாட்டு மரபைச் சிதைக்கவில்லை.நிறைய வரலாறு பேசினாலும் இது சமகால நாவல்.சமகாலத்தில் எழுப்பப்பட்ட சில கேள்விகளின் முடிச்சுகளைத் தேரிய கலைப்பயணம்.நாடகக் காதல் என்று சொல்கிறார்கள் இல்லையா?நான் சில காதல் நாடகங்களை உருவாக்கியிருக்கிறேன்.பிறந்த மதத்துக்கு திரும்புதல் என்கிறார்கள்.பிறப்பில் மதம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறேன்.ஆனால் இவற்றை நாவலில் வலை போட்டுத் தேடினாலும் கிடைக்காது.ஏனென்றால் நாவல் ‘கொடக்கோனார் கொலை வழக்கு’ குறித்து மட்டுமே பிரஸ்தாபிக்கிறது.இதில் கொலையாளிகளே விசாரணை அதிகாரிகளாக உள்ளனர்.