தனது தனிமொழியை இந்த மொழியின் பெரும் கவிமரபுக்குள் ஒன்றிணைக்கும் உபாயமாகவே கவிஞர் கவிதையை செய்து இருக்கிறார் என்றுபடுகிறது.தனது இடத்தை நிர்ணயிக்கும் செயலாகவே தோன்றுகிறது.காலங்காலமாகத் தொடரும் பெண் மனநிலையை நவீன பின் புலத்தில் நிறுவும் எத்தனமாக இதை சொல்லலாம்.இதை உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் கையாளுகிறார்.சங்க இலக்கியத்தில் இடம் பெறும் காதல் வெறும் லட்சிய நிலை சார்ந்ததல்ல;உடலின் வேட்கையையும் வெளிப்படுத்துவது.அதை நவீனப் பொருளில் கையாளுகிறார் சக்தி ஜோதி.