தன் சக மனிதர்கள் துயருறுகிற போது அவர்களுக்கு ஆதரவாகவும், அனுசரணையாகவும் பேசுகிற மனிதர்களால் மட்டுமே இந்த உலகம் இயங்குகிறது. பசித்துக் கிடக்கும் மனிதக் கூட்டத்திற்கு உணவும் தவித்து கிடக்கும் ஊர்க்கு நீரும் வந்து சேர்வது இயற்கையின் பாற்பட்டது மட்டுமல்ல. காலந்தோறும் கதைகள் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. தன்னை எடுத்துக் கையாளப் போகிற கலைஞர்களுக்காக அவை காத்திருக்கின்றன. என் சொற்கள யாவருக்குமாந்தாக மாற்றிவிடு என இறைஞ்சுகின்றன.