ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே புதிய உறவுகளை வடிவமைக்கும் பணியை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு எமக்கிருக்கிறது.இதுவரைகாலமும் இருந்ததைப் போல சிறைப்படுத்தும் அனுபவமாக இல்லாமல்,ஒரு விடுதலை அனுபவமாக குடும்ப வாழ்வை வடிவமைக்கும் வாய்ப்பு எமக்கிருக்கிறது.பெண்ணையும்,அவளுடன் சேர்த்து எம்மனைவரையும் விடுவிக்கும் வாய்ப்பு எமக்கிருக்கிறது.