கார்த்திகையில் வருபவள்
தீ வடிவங்களில் தீபம் அழகு.
மொழி வடிவங்களில் கவிதை அழகு
உலகின் முதல் தீபத்தைப்
பெண்தான் ஏற்றி இருக்க வேண்டும்
உலகின் முதல் கவிதையைப்
பெண்தான் எழுதி இருக்க வேண்டும்
அந்த அழகு,
கவிஞர் லலிதாமதியின்
கவிதைகளிலும் சுடர்விடுகிறது.
--- தபு சங்கர்