கம்பன் புதிய பார்வை
இக்காலத்தில் தமிழரின் உயர்வை நிலைநாட்ட வேண்டும் என்ற கருத்துடன், சங்கப் பாடல்களில் காணப்பெறும் பழந்தமிழ் வாழ்வு முறை அனைத்தையும் ‘ஓகோ’ என்று புகழும் பழக்கம் மிகுதியாக உள்ளது.
இந்நூலின் பல பகுதிகள் இக்காலத்தில் பலரும் தமிழர் நாகரிகம் பற்றிக் கூறிவரும் புகழுரைக்கு எதிராகக் காணப் படலாம். எனவே இவற்றை அனைவரும் ஏற்றுக்கொள்வர் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இக்கருத்துக்களை நன்கு சிந்தித்துப் பார்த்த பிறகு, கொள்ளுதலோ அன்றித் தள்ளுதலோ செய்க, என்று மட்டும் வேண்டிக் கொள்ளுகிறேன்.
--- அ.ச.ஞானசம்பந்தன்