‘அதிகாரம் கிடைப்பது சுலபம்,விவேகத்துடன் செயல்படுவது கடினம்’ என்று எட்மண்ட் பர்க் சொன்னார்.காமராஜர் அதிகாரத்தைப் பெற்று,விவேகத்துடன் மக்களுக்காக ,நாட்டுக்காகசெயல்பட்டார்.இன்றைய அரசியல்வாதிகள் காமராஜர் அவர்களின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்.காமராஜர் இன்று நம்மிடையே இல்லை.இருப்பினும்,அவருடைய சகாப்தம்,அவர் மக்களுக்காக நாட்டுக்காக ஆற்றிய பணி என்றும் தமிழ் மண்ணில்,நாட்டில்,நிலையாக நிற்குமென்பதில் ஐயமில்லை.