தலைவர் கலைஞர் குறித்த எவ்வளவோ புதிய செய்திகளைச் சொல்லும் இந்நூலினைப் படிக்கின்ற ஒவ்வொருவரின் மனதிலும் தேக்கி வைத்துக்கொள்ள வேண்டியவை பின்வரும் வைர வரிகளாகும்:
அவரது கருத்தியலின் ஆழத்தில் வகுப்புவாதத்தோடு சமரசம் செய்துகொள்ளாத பகுத்தறிவு கங்கு கனன்றுகொண்டிருப்பதை எனக்குக் காட்டியது. அவரது பேச்சில் எரிமலை உமிழ்வாக அவ்வப்போது அந்தக் கனல் வந்துவிழுவதுண்டு. அதனால் அவர் அரசியல் தளத்தில் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள் ஏராளம். ஆனால் அந்த இடையூறுகளையெல்லாம் தாண்டி கலைஞரைத் தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவராய் அடையாளப்படுத்திக்கொண்டிருப்பது அந்த அடியாழத்து நெருப்புதான்.”
ந்த நெருப்புதான் தலைவர் கலைஞரின் போர்க்குரல் ஒலிக்காதா என்ற ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் மீண்டும் மீண்டும் நம்முள் எழுப்புகின்றது.
தங்கம் தென்னரசு