கடவுளின் நண்பர்கள்
தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் இடம் பெறாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதிகம் பேசப்படாத விஷயங்களைப் பேச முனைவதும் பூசி மெழுகாமல் அவற்றைக் கையாள்வதும் இந்த நாவலின் சிறப்புக்கள். பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியின் பின்புலத்தில் மண்டல கமிஷன் அமலாக்கம், ராமர் கோயில் பிராச்சர இயக்கம் ஆகியவற்றால் மாணவர் சமுதாயத்தில் ஏற்படும் சமுதாயத்தில்கொந்தளிப்புகள் அழுத்தமாக பதிவாகின்றன. இட ஒதிக்கீடு என்னும் கோட்டின் இரு புறமும் நிற்கும் மாணவர்களின் உணர்ச்சிகளும் போக்குகளும் பக்கச்சார்பு இல்லாமல் வெளிப்படுத்துகின்றன.
மாணவர் விடுதி என்னும் பின்புலம் இவ்வளவு துல்லியமாகத் தமிழ்ப் புனைக்கதைப் பரப்பில் பதிவானதில்லை. மண்டல, கோவில் சார்ந்த சலனங்களுடன் ராகிங் என்னும் அம்சமும் நாவலில் கையாளப்படுகிறது. இவை அனைத்தும் புனைவம்சத்துடனும் தேவையான மெளனங்களுடனும் வெளிப்படுவது நாவலின் கலைப் பெறுமானத்தைக் கூட்டுகிறது.