உலகளாவிய சந்தையில் ஒன்றிணைவது, வளரும் நாடுகளில் மரபுவழி வருகின்ற மதநம்பிக்கையின் சக்த்தியைப் பலவீனப்படுத்துகிறது என்று பாரம்பரிய ஞானம் சொல்கிறது. ஆனால் இந்தப் புதுவழி வகுக்கும் நூலில் மீரா நந்தா இன்றைய இந்தியாவில் இப்படி நிகழவில்லை என்று வாதிடுகிறார். மதச்சார்பின்மை வளர்ந்து வருகிறது என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, குறிப்பிடத் தக்கவாறு இந்து மதமும் நவ-தாராளக் கருத்தியலும் பின்னிப் பினைதலை இந்தியா கண்டுவருகிறது.