Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கச்சத்தீவு : தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம்

(0)
kacha theevu
Price: 160.00

Weight
230.00 gms

கச்சாதீவு தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம்

நாற்பது ஆண்டுகளாகத் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நட்த்திவரும் அறிவிக்கிப்படாத யுத்தத்தின் முழுப்பரிமாணத்தையும் விளக்கிச்சொல்லும் முதல் புத்தகம்.

இந்திரா காந்தி சிறிமவோ பண்டாரநாயக ஒப்பந்தம் மூலம் முந்நூறு ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமல்ல; தமிழக மீனவர்களின் உரிமைகளும் எதிர்காலமும் சேர்த்தே பறிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சாதீவு இலங்கைவசம் சென்றதை இந்தியாக் கூட்டாட்சித் த்த்துவத்தின் மீது நட்த்தப்பட்ட தாக்குதலாகவும் பார்க்கமுடியும். மத்திய அரசு நினைத்தால் மாநில அரசின் மீது எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதற்கான சமகால சாட்சியம் இது.

அறுநூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் ஊனமாக்கப்பட்டுள்ளார்கள், மதிப்பிட முடியாத அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பெரும் வல்லரசுக் கனவுடன் இருக்கும் இந்தியாவால் சின்னஞ்சிறு இலங்கைத்தீவை குறைந்தபட்சம் அதட்டக்கூடிய முடியவில்லை.

கச்சாத்தீவு கைமாறிய வரலாறு, அதன் பின்ன்ணியில் இருக்கும் அரசியல், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், ஈழத்தமிழர் போராட்ட்த்தின் தாக்கம், இருதரப்பு நியாயங்கள், மீனவர்களின் எதிர்பார்ப்புகள், கச்சாத்தீவை மீட்பதில் உள்ள சட்டச் சிக்கல்கள், நிபுணர்கள் முன்வைக்கும் தீவுகள் என்று கச்சாத்தீவு குறித்த முழுமையான அரசியல், சமூக, வரலாற்றுச் சித்திரத்தை முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.