இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர் பெரியாரைப் பற்றிய சுவையான பல தகவல்களைக் கொண்ட இந்நூல் பெரியாரைப்
பற்றிய முக்கியமானதொரு சித்திரத்தை முன்வைக்கிறது. ஆதிக்க மனநிலையையும் சமூக ஏற்றத்தாழ்வையும் மத சடங்குகளையும் எதிர்த்து
தன் வாழ்நாள் முழுதும் ஓயாது போராடிய பெரியவரின் பிறப்பு முதல் பள்ளிப்படிப்பு, தொழில் ஈடுபாடு, அரசியல் அறிவு என பல்வேறு
தகவல்கள் விரிந்துகொண்டேயிருக்கிறது. எவ்வித சமாதானத்துக்கும் இடங்கொடாமல் தளராத கொள்ளைப் பிடிப்பும் பற்றுறுதியும் கொண்ட
தனித்த ஆளுமையான பெரியாரை அறிந்துகொள்ள இந்நூல் துணைப்புரியும்.