ஜே.சி.குமரப்பா ஒரு காந்தியப் பொருளாதாரவாதி என அறியப்பட்டவர். அவர் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார், அந்த
வகையில் அவர் இரும்புத்திரை என நினைத்த ரஷ்யாவிற்கு மேற்கொண்ட பயணத்தைப்பற்றிய புத்தகம் இது. அவர் ரஷ்யாவில் பார்த்துத்
தெரிந்துகொண்டதையும் அது இந்தியாவிற்கு எந்த வகையில் பயனாவது என்பதையும் பற்றி விரிவாக எழுதி வெளியானவற்றை இங்கே
மொழியாக்கம் செய்திருக்கிறார் டாக்டர் ஜீவானந்தம். இவர் தொடர்ந்து ஜே.சி.குமரப்பாவின் புத்தகங்களை மொழியாக்கம் செய்து வருகிறார்.
குமரப்பாவின் மற்ற நாடுகளுக்கு சென்ற பயணங்களும் அதைப் பற்றிய அவருடைய பார்வைகளையும் தொடர்ந்து மொழியாக்கம்
செய்து வருகிறார். அந்த வரிசையில் முதலில் வெளிவரும் புத்தகம் இது.