ஈராக்கில் வசிக்கும் ஒருவரால் நேரடியாகத் தமிழில் எழுதப்படும் புத்தகம் இது.பயணக்கட்டுரை போலவும் இல்லாமல்,ஆய்வுக்கட்டுரை போலவும் இல்லாமல்,இரண்டுக்கும் இடையேயான ஒரு பொதுப்பாதையில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
ஈராக் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது பாலைவனமும் ரத்தமும் துப்பாக்கியும்தான்.இது ஈராக்கின் ஒரு பக்க முகம் மட்டுமே.ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஈரக்கின் இந்தப் பக்கத்தோடு,அதன் வளமை,ஈராக்கியர்களின் அன்பு,இந்தியர்கள் மீதன மரியாதை என்ற இன்னொரு பக்கத்தையும் இப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.இந்நூலை வாசிக்கும் ஒவ்வொரு இந்தியரும்,தங்கள் அமைதியான இந்திய வாழ்க்கையின் பெருமிதத்தை ஒப்பிடாமல் கடக்கவே முடியாது.