இளமையும், துடிப்பும், துய்ப்பும், பொறுப்புணர்வும், சமூக அக்கறையுமாக அன்றாட
வாழ்வை எதிர்கொள்ளும் இளைஞர்கள் இவர்கள். தமிழில் இன்று பல புதிய இளைஞர்கள்
எழுதத்தொடங்கி உள்ளனர். ஊடகப் பரவலும், சமூக வலைதளப் பெருக்கமும் பலரையும்
எழுதத்தூண்டி உள்ளன. அச்சு ஊடக வரையறைகளைத் தாண்டி எண்ணங்களை
எழுத்தாக்கும் சனநாயகப்போக்கு மிகுந்துள்ளது. இது ஒரு வகையில் நம்பிக்கை அளிக்கிறது.
என்றாலும், அதன் இன்னொரு முகம் பொறுப்பற்ற – தன் எழுத்துக்கு / கருத்துக்கு தன்னை
உட்படுத்திக் கொள்ளாததாக அமைந்து நெருடுகிறது. இன்று புழங்குவெளி சுருங்கிப்
போய்விட்டது. உரையாடல்களும் இல்லை. பெரும்பாலும் ஒருவழிப்பயணமாக எல்லாமும்
ஆகிப்போய்விட்டது.
‘இப்படிக்கு... கண்ணம்மா’ வித்தியாசமான நாவல் முயற்சி. சமூகத்தின் பல
பின்புலங்களிலிருந்து சென்னைக்கு வந்து தனித்து வாழும் நண்பர்களின் கதை. சம்பத்,
சந்துரு, திலக், சேகர், பிரபா... என ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. தஞ்சை
வட்டாரத்திலிருந்து ஐ.டி. வேலைக்கு வந்து சேரும் சம்பத்தும், லாட்ஜ் நடத்தும் தந்தைக்கு
மகனாக இஞ்சினியர் சந்துரு, பெருவிவசாயியின் மகனாகப் பிறந்து திரைப்பட ஆசையில்
வந்து சேர்ந்த திலக், சிறுவயதில் பெற்றோரிடமிருந்து காணாமல் போய் கூர்நோக்கு
இல்லம், வளர்ப்பு பெற்றோர்களால் ஆளாகி வேலைக்கு வந்து சேரும் பிரபா. இவர்களோடு
அண்ணன், அண்ணியிடம் கோபம் கொண்டு விட்டேத்தியாக வேலையின்றித் திரியும்
சேகர்... என எல்லோருமாக, எல்லோருக்குமாக வாழும் இன்குடில்...
வேலை, சம்பளம், திருமணம்... என ஒவ்வொருவரும் வாழ்வில் நிலைப்படும்
தருணம். சம்பத் துடிப்பானவன். வசதியும் கூட. சகோதரிகள் அயலகத்தில். பெண் பார்க்கும்
படலம் நடக்கிறது. திடீரென ஒருபொழுதில் வலைதளத்தில், முகநூலில் இவன் எழுதிய ஒரு
கவிதைக்கு ‘டிலோனி டிலக்ஸி’ என்ற பெயரில் ஒரு ஆதரவும் (like) கருத்துருவும் (comment)
வருகிறது. யார்? எவர்? ஆய்கிறார்கள்... அவள் இலங்கைத் தமிழச்சி. ஒருவருக்கு ஒருவர்
ஈர்ப்பு, பகிர்வுகள்... காதல் மலர்கிறது... ஈழம், போர், போருக்குப் பிந்தைய நெருக்கடிகள்...
டிலோனியின் நிஜப்பெயர் கண்ணம்மா... புலம்பெயர்ந்து திருமணம் செய்துகொள்ள
யத்தனித்தல்... என கவிதையும் காதலுமாக நகர்கிறது காலம்.
எதிர்பாராது ஒரு விபத்தில் சம்பத் சிக்கி உயிருக்குப் போராடுகிறான். உயிர்
மிஞ்சுகிறது. உடல் பறிபோகிறது. இடுப்புக்குக் கீழே இயக்கமற்றுப் போகிறான்.
தொடர்பற்றுப் போகிறது. திடீரென ஒரு நாளில் கண்ணம்மா வந்து நிற்கிறார். அதிர்ச்சி.
ஒருவழியாக ஒன்று கூடுகிறார்கள். திருமணம். அப்புறம் செயற்கைமுறைப் பிள்ளைப்பேறு.
இருபிள்ளைகள்... சுபத்தில் முடிகிறது கதை.
நாவலாசிரியர் தன் நண்பன் திலக்குக்காக திரைக்கதை சொல்வதாக அமைகின்றது
நாவல். தமிழ் திரைப்படங்களுக்கே உரிய பல தொழில் நுட்பங்கள் கதையில்
இடம்பெறுகின்றன. என்றாலும் நாவல் நடப்பு வாழ்வோடு மிக நெருக்கமாகப்
பயணிக்கிறது. விவசாயம், தொழில்கள், பயணங்கள், விபத்துகள், நோய், பாலியல்,
காவல்நிலையம், மருத்துவமனை, குருதிக்கொடை, உடல்தானம், காதல், திருமணம், ஊனம்,
உள்ளிட்டப் பலவற்றை எதிரும் புதிருமாக நாவல் விவாதிக்கின்றது. காதல் மாபெரும் உயிர்
உந்துதலாக, மனித வாழ்வின் உன்னதமானதாகச் சித்திரமாகின்றது.
இலங்கைப் பின்னணி கதைக்கு ஈர்ப்பைத் தருகின்றது. ஈழப் போர் பற்றிய அதன்
தாக்கம் குறித்தப்பகுதிகள் மட்டுமின்றி ஈழத்தமிழும் ஈர்ப்பைத் தருகின்றது. தொடக்கத்தில்
ஐம்பது பக்கங்கள்வரை கதையை நிலைகொள்ள வைக்கும் தவிப்பும் பின்னர் கதையை
உச்சம் நோக்கி வளர்க்கும் தகிப்பும் நாவலாசிரியரின் கலையாக்க முயற்சியை
காட்டுகின்றன.
கதைமாந்தர்கள் யாவரும் உயிருள்ளவர்கள். அவர்களின் அகம் கதைகளில்
வெளிப்படுகின்றது. பல அருமையான தமிழ்ப் பெயர்கள். எழுத்தாளரின் தமிழ் நேயம்
வெளிப்படுகின்றது.
நட்பு, அன்பு, காதல், தோழமை முதலிய மானிட நற்குணங்களை லக்ஷ்மிசிவக்குமார்
தன் எழுத்தில் சாத்தியமாக்கி யிருக்கிறார். செறிவான நடை. கவித்துவ வார்த்தைக்
கோலங்கள்.
வாழ்வே சவாலாகிப் போனச் சூழலில் வாழ்வின் அர்த்தம் தேடும், மனித
உணர்வுகளையும் மனித உறவுகளையும் மையப்படுத்தும் நாவலாக இது திகழ்கின்றது.
நம்பிக்கை அளிக்கும் எழுத்தாளராக லக்ஷ்மிசிவக்குமார் இந்நாவல் வழி
அடையாளப்படுகிறார். எழுத்துப் பயணம் தொடரட்டும்.
தஞ்சாவூர் முனைவர்.இரா.காமராசு
17 /11/2015 பொதுக்குழு உறுப்பினர்
சாகித்யஅகாடமி