தத்துவம் பற்றிய கட்டுரைகளை நாம் எதி காலத்திலும் ஆர்வத்தோடு பயில முடியும் என்பதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.நாம் வாழும் பிரபஞ்சம் ,உலகம்,வரலாறு நம் வாழ்வை பற்றிய புதிர்களை,அற்புதங்களை,விரிவைத் தத்துவங்கள் வெளியிடுகின்றன.எந்த ஒரு மதமும் வரலாற்றின் வழியே தன்னை தானே மாற்றிக் கொண்டும் புதுப்பித்துக்கொண்டும் வருவது இயல்பானது.இன்றைக்கு நான் மார்க்சியனாக இருக்கலாம்.பெரியாரியனாக இருக்கலாம் என்றாலும் நம் முன்னோர் கடந்து வந்த பாதையின் அழகைத் திரும்பி பார்த்து நம்மால் வியப்புறாமல் இருக்க முடியாது.