இந்திய மண்ணில் அரபியர்கள்,சீனர்கள்,இந்தியர்கள்,துருக்கியர்கள் தொடங்கிய சரக்கு சில்லரை வர்த்ய்தகமே இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியா என்ற உணர்வை நமக்கு ஊட்டி வருகிறது என்பதை அந்த வரலாறு நமக்கு காட்டுகிறது.
18ம் நூற்றாண்டில் கல்கத்தாவில் புகுந்த பிரிட்டன் நாட்டு வர்த்தகர்கள்,வர்த்தக ரீதியாக ஒரே நாடாக்க டெல்லியில் மைய அரசையும் சட்ட ஆட்சி முறையையும் புகுத்தினர்.சுல்தான்களோ பின்னர் வந்த மொகலாயர்களோ நடத்திய தர்பார் ஆட்சிமுறையைவிட இது நவீன முதலாளித்துவ உற்பத்தி முறையை அறிமுகப்படுத்த உகந்ததாக இருந்தது.ரயிலும் சாலைகளும் மக்களை வேகமாக இணைத்தன.ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பிரிட்டன் நாட்டு மக்களுக்கு பயன்பட்டது போல் இந்திய மக்களுக்குப் பயன்படவில்லை.