இலை உதிர்வதைப் போல்
…குழந்தைகளையும் சிறுமிகளையும், பெண்களையும். ஆச்சிகளையும் கதா உலக்த்தில் பார்த்து ரொம்ப நாள் ஆனது மாதிரி இருக்கிறது. நவீன வாழ்வின் நுட்பம் அல்லது நுட்பமின்மையால் மொழி இரும்புக் கிராதிகளைப் போல கிறீச்சிட்டு மறிக்கிறது.
நமக்குக் காற்றைப் போல், இசையைப் போல் மொழி வேண்டும். குழந்தைகள் ஓடிவரும் தேவவனம் வேண்டும். அதற்கான ஒரு ஜன்னலைத் திறந்திருக்கிறது நாறும்பூநாதனின் கதகள்.
-கிருஷி
மானுடத்தின் சாராம்சம் மனித உறகளே. மனித உறவுகளில் ஏற்படும் முடிவுறாத சிடுக்குகளாஇப் புரிந்து கொள்ளவே கலைஞன் முயற்சிக்கிறான்.
நாறும்பூநாதனின் பெரும்பாலான் கதைகளில் வீடும் குடும்பமும் முக்கியக் களங்களாக அமைந்திருக்கின்றன. பாலயத்தின் நினைவு சுவடுகளை பின்பற்றி எழுதிப் பார்த்திருக்கிற கதைகள். அதனால் அதன் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானது…