சர்வதேச கம்யூனிச இயக்கமும் தேசிய விடுதலை இயக்கங்களும் உலகெங்கிலும் உள்ள முற்போக்கு சக்திகளும் என்றும் நினைவில் வைத்திருக்கும் பெயர் ஹோ சி மின்.அவர் வியத்நாமுக்கு மட்டும் உரியவர் அல்லர்.அல்லது செங்கொடி ஏந்தியவர்களுக்கு மட்டுமே தலைவர் அல்லர்.ஹோ ஒரு உலக மனிதர்.வெற்றிகரமான புரட்சியாளர்.இன்றும் அவரை நாம் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியத்தை அன்றே அவர் உருவாக்கியிருக்கிறார்.
வெ.மன்னார் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியவர்.தற்போது கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராக உள்ளார்.மின்வாரியத்தில் கணக்கதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவருடைய கட்டுரைகள் தீக்கதிர்,மார்க்சிஸ்ட் மற்றும் வண்ணக்கதிரிலும் பிரசுரமாயுள்ளன.தொழிற்சங்க ஏடுகளிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.இவர் எழுதி வெளிவந்த சில நூல்கள் : time, love, marriage ages, large garden (essay collection), Arni (local history), Lenin - brief biography, sixty-five-year-old, who currently resides in his hometown Arani.