காந்தியைக் கொன்றவர்கள்
நாதுராம் விநாயக் கோட்ஸே: இந்து ராஷ்டிரம் பத்திரிகை ஆசிரியர், 1910 மே 19 அன்று ஒரு சநாதன பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் குழந்தைப் பருவத்திலேயே மூன்று பிள்ளைகள் இறந்துவிட்டதால் அவருடைய பெற்றோர்கள், தீயசக்திகளுக்குப் பரிகாரம் செய்விக்க, அடுத்த மகனைப் பெண்ணைப்போல வளர்ப்பதென்று முடிவுசெய்தனர்.அதனால் அவர் மூக்குப்பொட்டு (நாது, தமிழில் நத்து) அணிந்து வளர்ந்தார். ஆகவே நாதுராம் என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தார்.
கோபால் கோட்ஸே: நாதுராம் கோட்ஸேயின் தம்பி, மென்மையான, மிருதுவாகப் பேசுகின்ற, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத மனிதர். தன் அண்ணனின் ஆர்வமிக்க இந்த மேம்பாட்டுப் பணியின் செல்வாக்கிற்கு உள்ளானவர். இரண்டாம் உலகப்போரின் போது அயல்நாட்டிற்குச் சென்று பணியாற்ற முனைந்து பிரிட்டிஷ் படைகளுடன் ஈரான், ஈராக்கிற்கு அனுப்பப்பட்டவர்.
மதன்லால் பெஹ்வா: பாகிஸ்தான் அகதி, பம்பாயில் ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் சேர்ந்தவர். அது கையெறி குண்டுகளையும் தயாரித்தது.
வலிய சதைப்பற்றான உடற்கட்டுக் கொண்டவர்.1948 ஜனவரி 20 அன்று காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு எறிந்த்தற்காக் கைதுசெய்யப்பட்டார். தில்லிக்குக் காந்தியைக் கொல்லச் சென்ற பயணத்தின்போதே எல்லாம் வழக்கம்போலவே நடக்கும் என்ற நம்பிக்கையோடு தனக்குத் தன் குடும்பத்தினரால் மண உறுதி செய்யப்பட இருந்தவர்களையும் ‘பெண்பார்க்க’ இருந்தவர்.