உலகளவில் பெரும்புகழ் பெற்ற பின்லாந்து எழுத்தாளர் மிக்கா வல்தரி பற்றியும், அவர் எழுதிய ‘சினுஹே என்னும் எகிப்தியன்’ என்ற சரித்திர நாவல் பற்றியும், இந்த நாவலை தமிழுக்கு மொழிபெயர்க்க எடுத்த முயற்சிகள் பற்றியும் குறிப்பிடுகின்றார். முயற்சி தடைப்படுகின்றது. மனம் சஞ்சலம் கொள்கின்றது மூன்றில் ஒரு பாகம் நிறைவுற்ற நிலையில், ஏன் அவர் கனடா செல்கின்றார் என்பதை நீங்களே புத்தகத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.|கலங்கிய குளத்தின் சுவடாக, குழம்பிய கனவின் நினைவாக ‘சினுஹே’ என்னுள் வாழ்கின்றது.” என்று முடிக்கின்றார்.
பின்லாந்து நாட்டைப் பற்றியும், அங்குள்ள மக்கள் அவர்கள்தம் வாழ்க்கை முறை பற்றியும் சொல்கின்றார். அங்குள்ள இயற்கைக் காட்சிகள், மலைகள், ஏரிகள், காட்டு வளம், காகித ஆலைகள் பற்றியெல்லாம் விவரித்துக் கொண்டே செல்கின்றார்.
பின்லாந்து மக்கள் மாசிலா மனமுடையவர்கள். மனித மனங்களை மதிக்கும் மரியாதை தெரிந்த மரபுடையவர்கள். உள்ளத்தில் குடிபுகுந்தால் உயிரையே தருவார்கள்| என்கின்றார் இவர். இப்படிப்பட்ட மக்கள், ஒரு காலத்தில் லஞ்சம் என்பதே என்னவென்று தெரியாமல் இருந்திருக்கின்றார்கள் என்பதில் வியப்பேதும் இல்லை
இவரது பேனா, இவர் பின்லாந்து நாட்டுக்குள் நுழைந்தது முதல் அந்த நாட்டை விட்டு வெளியேறும் வரை எழுதிச் செல்கின்றது.
- சுதாகரன் செல்லதுரை