எழுதவும் தமிழாக்கம் செய்யவும் எஸ்.வி.ராஜதுரை தேர்ந்தெடுக்கும் விஷயங்களே அவரின் அறிவுப் பரப்பைச் சொல்லும்.தேசிய,சர்வதேச,ஊடக அரசியல் எதுவாக இருந்தாலும்,தமது கருத்துகளை மார்க்ஸியக் கண்ணோட்டத்துடன் அம்பேத்கார்,பெரியார் பார்வையின் வழியாகவும் பட்டுக் கத்தரித்தாற் போல முன்வைப்பவர்.தமிழகத்தில் மட்டுமே அறியப்பட்ட கலைஞர்கள்,எழுத்தாளர்கள்,சமூகச் சூழலுடன் தொடர்புபடுத்திக் காட்டுபவர்.அவரது வாழ்க்கையைப் போலவே,அவரது எழுத்துகளிலும் அரசியலும் கலை இலக்கியமும் இரண்டறக் கலந்துள்ளன.