எரியத்துவங்கும் கடல் :
நான் கவிதைகளால் ஆனவள். கவிதைகள் வழியே என்னை நான் அறிந்தேன். கவிதையே என் மனசின் இருளடந்தப் ப்குதிகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியது. என் சிந்தையில் இருந்த கசடகற்றி என்னை ஒளிப் பொருந்தியவளாக்கியது. கவிதையே என்னை மூடநம்பிக்கைகளில் இருந்து காப்பாற்றி நம்பிக்கை உடையவளாக்கியது. தனித்துவ மிக்கவளாக, சுயமரியாதை நிரம்பியவளாக நான் பரிமளிக்கும் வித்தையைக் கவிதையே கற்றுக் கொடுத்தது. கடவுளிடமிருந்தும் சாத்தாஙளிடம் இருந்தும் விலகி நான் பத்திரமாக இருப்பதற்குக் கைவசம் இருக்கும் கவிதையே சூத்ரதாரி.