ஆத்திசூடி என்பது சிவபெருமானுக்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்று. ஆத்தி மாலையைச் சூடியிருப்பவன் என்பதன் அடிப்படையில் சிவனுக்கு அந்தப் பெயர். ஆனால் ஆத்திசூடி என்ற உடனேயே நம் நினைவுக்கு சிவபெருமான் வருவதில்லை. இரு வார்த்தைகளில் மிகப்பெரும் கருத்துகளைச் சொல்லும் கவர்ச்சிகரமான கவிதை வடிவம்தான் நினைவுக்கு வருகிறது. ஒளவையார் முதலில் தொடங்கி வைத்த இந்தக் கவிதை வடிவம் பிற்காலத்தில் பாரதியையும் ஈர்த்தது. ஒளவை எழுதிய ஆத்திசூடியால் ஊக்கமும் ஆக்கமும் பெற்று மாற்றம் வேண்டும் என்ற ஏக்கம் மேலோங்க புதிய ஆத்திச்சூடியை படைத்தளித்தான் பாரதி. பாரதி எழுதிய புதிய ஆத்திசூடிக்கு புத்துரை கண்டிருக்கும் இந்நூல் சங்கர ராம பாரதி அவர்களால் அழக்குற வெளிவந்துள்ளது