நவின தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன் அண்மைக் காலத்தில் எழுதிய 123 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். வாசகனின் “உளம் நிற்கும் நூல்’’.
நமது இன்றைய வாழ்வின் கோலங்களை எள்ளலுடனும் கனிவுடனும் சமயங்களில் வேடிக்கையாகவும் சித்தரிக்கும் இந்தக் கவிதைகள் பன்முகம் கொண்டவை. பல குரலில் பேசுபவை. சில புதிரானவை. சில மர்மமானவை. சில வினோதமானவை. சில அபத்தமானவை. சில இயல்பானவை. சில பிரகாசமானவை. நவீன மனிதனைப் போன்று அதிநவீனமானவை இந்தக் கவிதைகள்.
விரிவான களங்களிலும் மாறுபட்ட களங்களிலும் வேறுபட்ட பார்வைகளுடனும் தனித்துவமான கூறல் முறையிலும் துணிச்சலான சோதனை நோக்கிலும் உறுவான இந்தக் கவிதைகள் ஒரு முதிர்ந்த கவிஞரின் பக்குவப்பட்ட இளமைக்குச் சான்றாக நிற்கின்றன.