அதிகம் படித்தவர்கள்,பெரிய பணக்காரர்கள்,பெரிய வியாபாரம் செய்பவர்கள்,பலமிக்கவர்கள் மட்ட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று கட்டாயமா என்ன?இருப்பதை வைத்தே பெரிய வெற்றிகளைப் பெற்றவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.
பத்தும் பத்தும் சேர்ந்ததுதான் இருபது என்பது கணக்கு.ஆனால் பத்தும் பத்தும் சேராமலேகூட சிலரால் இருபதைப் பொற்றுவிட முடிகிறது.அவர்கள் சேர்ப்பது இரண்டையும் பூஜ்ஜியத்தையும் மட்டுமே.அவற்றை ஒன்றுக்கு ஒன்று அருகில் வைத்து!அவர்கள் செய்வது சாமார்த்தியம்.அவர்களிடம் இருக்கும் சின்ன தூண்டிலை வைத்தே பெரிய மீன்களைப் பிடிக்கிறார்கள்.
அதற்கு வித்தியாசமாக சிந்திக்க வேண்டும்.அது எப்படி என்பதை எளிமையாகவும்,சுவையாகவும் இந்த நூலில் விளக்குகிறார் சோம வள்ளியப்பன்.