சின்னச் சின்ன வாக்கியங்கள்
பியரெத் ஃப்லுசியோ
(பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில்: வெ. ஸ்ரீராம்) • 2010 • 192 பக்கங்கள்
• ISBN 978-81-85602-63-9
“இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நவீன நுகர்வோர் சமூகத்தில், மிகவும் நீண்டதாக இல்லாமல் ஆனால் பிரமாதமாக எழுதப்பட்டிருக்கும் ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’ என்ற பியரெத் ஃப்லுசியோவின் நாவல் பிரெஞ்சு இலக்கிய உலகின் பாரம்பரிய அம்சமான மனிதநேயத்தை நாம் நெகிழ்வுறும் வகையில் நினைவூட்டுகிறது. இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கிடையிலான (தாய்-மகள்) இந்தக் கதையில், நம் ஒவ்வொருவரின் சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையும் நம்மால் இனம்கண்டுகொள்ள முடியும். உருக்கமாகவும் அன்னியோன்னியமாகவும் கதை சொல்லும் தன்னுடைய பாணியில், மானுட வாழ்க்கையின் சோகத்தைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கிறார் இதன் ஆசிரியை-கதாநாயகி. இதுவே இந்தப் படைப்பின் வெற்றிக்குக் காரணம்.”
சின்னச் சின்ன வாக்கியங்கள், பியரெத் ஃப்லுசியோ. Cre-A Publication, க்ரியா பதிப்பகம், BUY ONLINE TAMIL BOOKS,