தமிழ்ப் பிரபாகரன் ஓர் ஊடவியலாளராக இருப்பதால்தான் இந்நூல் உருவாகியிருந்தது.ஊடக முதலாளிகளின் சுய தணிக்கை,இழுப்புகள்,அழுத்தங்கள் கொண்ட கார்ப்பரேட் ஊடகச் செய்தி அறைகளுக்கு இன்பம் அளிப்பவராக ஒருவரை ஒருபோதும் நான் கண்டதில்லை.தமிழ்ப் பிரபாகரன் அடிப்படையில் சுதந்தரமானவராக இருந்திருக்கிறார்.அதனால்தான் அவர் அதிகாரத்தைக் கேள்வி கேட்பவராக இருக்கிறார்.மைய நீரோட்ட ஊடகங்களின் அழுத்தத்துக்கும் நிகழ்ச்சி நிரலுக்கும் எதிராக அவர் நீச்சலடிப்பதைப் பார்க்கிறேன்.