போஜராஜன்
போஜராஜன், பெரும் புலவன். மொழி, இலக்கியம், சமயம், தத்துவம், இசை பிற நுண்கலைகள், அறிவியல் துறைகள், விஞ்ஞானம், வான நூல், சிற்பம் கட்டடக் கலை, மருத்துவம், போர்க்கலை எனப் பலவற்றிலும் சிறந்த புலமை உடையவனாக இருந்தான். ஏறக்குறைய எல்லாத் துறைகளிலும் அவனுக்கு இருந்த புலமைக்கு, அவன் இயற்றிய நூல்களே சான்று.