பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் கூட்டுறவால் பிறந்த குழந்தைகளே இச்சாதி - அடிமை முறைக் குழந்தைகள்.அவை வீழ வேண்டும் என்றால், “நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் ஆட்பட்டுள்ள சகல சாதிகளையும் சேர்ந்த உழைக்கும் மக்களையும் இணைத்துப் பேரணி திரட்ட வேண்டும்”என்று கருத்துரைக்கின்றார் நூலாசிரியர் தா.பா.அவரின் இந்த உணர்வே விடுதலைக் கவிஞர் பாரதியின் உணர்வாக இருந்தது.சாதியம் சாராச் சமூக அமைப்பே அவரின் கனவாகும்.அக்கனவு மெய்ப்பட வைப்போம் - புன்மைகள் சூழாப் புதிய பாரதம் படைப்போம்!
-பொன்னடியான்