ஐஸியின் டைரியில் அவளது உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருந்த சந்தோஷங்கள்,சங்கடங்கள்,வலிகள்,வேதனைகள்,தன்னை சுற்றியுள்ளவற்றை அவள் பார்த்த விதம்,எனப் பலவகையாக அவளது பாணியில் விவரித்துள்ளார்.
ஆட்டிஸக் குழந்தைகளை கையாள்வது பல சமயங்களிலும் கடினமானது என்றாலும்,அன்போடும் அரவணைப் போடும்,பொறுமையோடும் அணுகினால் நல்ல முன்னேற்றம் நிச்சயம் உண்டாகும்.அன்றாட செயல்களில் அவர்களை இயன்றவரை ஈடுபடுத்துவதையும்,சுயதேவை பராமரிப்பில் கவனம் செலுத்துவதும் மிக முக்கியமானதாக கருதுகிறோம்.எல்லா குழந்தைகளையும் மதிப்போடும் மரியாதையோடும் நடத்துவது மிக அவசியம் என்பதை தெரிவிக்கும் வகையில் ஐஸியின் டைரியை வெளியிடுகிறோம். -AMARABHARATHI PUBLISHERS & BOOK SELLER