அஷ்டாவக்ர மகாகீதை துன்பம் ஏன்? துயரம் ஏன் ? 2 :
எது கண்ணுக்குத் தெரிகிறதோ, யாருக்கு அது தெரிகிறதோ, இந்த இரண்டின் இடையே உள்ள சம்பந்தம், அறிவுபூர்வமான சம்பந்தமாக அல்லது காட்சி உணர்வின் அடிப்படையிலான சம்பந்தமாக இருக்கலாம். வேறுவிதமாக்க் கூறுவதனால் – நான் – விசித்தேன். நான் பார்த்தேன் என்பது எல்லாம் கனவு போன்றவை. இந்த ஞானத்தைப் பெற்றவனுக்கு தெரியும் பொருள், தெரிந்து கொள்பவன், இடையிலுள்ள உறவு ஆகிய மூன்றும் கனவுபோல் மறைந்துவிடுகின்றன. இந்த உணர்வு ஒன்றே சத்தியமான ஞானம்.
உயர் ஆன்மீக உண்மை நிரந்திரமானது, பேரான்ந்தமானது, பேரொளியானது. அது ஆசிகளைப் பொழிகிறது. அதன் மூலம் அமுதம் பருகியது போன்ற பரவச உணர்வு மேலிடுகிறது. ஆனால் அதனால் சொல்லத் தக்க லாபம் எதுவும் கிடையாது. அன்றாடப் பயன்பாட்டின் அளவில் அது லாபம் தராது. அதை அஸ்திவாரமாக்க் கொண்டு நீ எந்தவிதமான சொத்து சுகத்தையும் நிர்மாணித்துக் கொள்ள முடியாது.