அஷ்டாவக்ர மகாகீதை முக்திப் பேரவா 1 :
மனித சமுதாயத்திடம் பற்பல சாத்திரங்கள் உள்ளன. ஆனால் அஷ்டவக்ர கீதை’ க்கு ஒப்பான தத்துவ சாத்திரம் எதுவும் இல்லை. வேதங்கள் கடினமானவை. உபநிடதங்கள் தணிந்த குரலில் பூடகமாகப் போதிப்பவை. பகவத் கீதையில் அஷ்டாவக்ர கீதைக்குச் சமமான சிறப்பு இல்லை. இதன் தனிச் சிறப்பு அற்புதமானது.
இதன் தனிச்சிறப்பு, அஷ்டாவக்கிரரின் தத்துவ ஞான போதனையில் எதன் ஆதிக்கமும் – சமூகம், அரசியல், மானுடம், சமுதாய அமைப்பு இவற்றின் பாதிப்பு புகவில்லை. நேரம், காலம் கடந்த இதற்கு மேலான தத்துவபோதனை வேறு எதுவும் இல்லை.
அஷ்டாவக்கிரரின் போதனைச் செய்தி மிகத் தெளிவானது. அதில் பிறர் தம் விளக்கம் – விரிவுரை எதையும் புகுத்த இயலாது. இதனால் தான் அதற்கு எவரும் பாஷ்யம், வியாக்யானம் ( விளக்க்வுரை ) எழுத முடியவில்லை. அதற்கு அவசியம் இல்லை. தெளிவும் தீர்மானமும் வெளிப் படையாக இருக்கும்போது விளக்க உரைக்குத் தேவை இல்லை. பல நூற்றாண்டுகள் கடந்த பின்னும் அவரது போதனையில் சேர்ப்பதோ, தவிர்ப்பதோ ஏற்படவில்லை. இப்படியொரு திட்பமான, தெளிவான போதனை, மொழித்திறன், சொல் நயம், போதனைச் சிறப்பு கைவரப் பெற்றவருக்குத்தான் சாத்தியமாகும். இது மிக்க் கடினம்.
இதனால்தான் சொல்லுகிறேன், நீங்கள் அற்புதமான தத்துவப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறீர்கள்.
ஓஷோ